‘பிகில்’ இசை வெளியீடு பேனர் வைக்க வேண்டாம்: இசிஆர் சரவணன் வேண்டுகோள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘பிகில்’ இசை வெளியீடு பேனர் வைக்க வேண்டாம்: இசிஆர் சரவணன் வேண்டுகோள்

சென்னை: விஜய் மக்கள் இயக்க காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளரும், மாவட்ட இளைஞரணி தலைவருமான இசிஆர் பி. சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் வருங்காலம் எங்கள் தளபதி நடிகர் விஜய் உத்தரவின்படி, அகில இந்திய மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் முன்னாள் எம்எல்ஏ புஸ்ஸி ஆனந்த் கேட்டுக்கொண்டதற் கிணங்க காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி நகரம், ஒன்றியம், பகுதி, வார்டு நிர்வாகிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். நாளை மாலை மேற்கு தாம்பரத் தில் சாய்ராம் கல்லூரியில் நடைபெறும் பிகில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதால் விளம்பர பேனர் வைக்க விஜய் தடை பிறப்பித்துள்ளார்.

ஆகையால் நிர்வாகிகள் யாரும் பேனர் வைக்க வேண்டாம் என தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

.

மூலக்கதை