ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு அதிகரிப்பு

திருப்பூர்:ரயில்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீசார் என, 400 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.'புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ரயில்களின் அனுப்பி வைப்பதில் கவனமுடன் இருக்க வேண்டும். தள்ளுமுள்ளு ஏற்படக்கூடாது. சமூக இடைவெளி கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அனைவரும் முககவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்,' என, ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதனால், திருப்பூரில் இருந்து அனுப்பி வைக்கப்படும் தொழிலாளர்களை ஜெய்வாபாய் பள்ளியில் மருத்துவ பரிசோதனை செய்து, அங்கேயே உணவு வழங்கி, டிக்கெட் மற்றும் ரயில்வே ஸ்டேஷனில் தரப்படுகிறது.தினமும் ஒன்று அல்லது இரண்டு ரயில் செல்லும் நிலையில், பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், ஒரே நாளில் மூன்று ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், பயணிகள் எண்ணிக்கையும், 1,464 ல் இருந்து, 1,600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனை சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இதற்காக, போலீஸ் துணை கமிஷனர் பத்ரிநாராயணன் தலைமையில், நான்கு உதவி கமிஷனர், ஆறு இன்ஸ்பெக்டர் என, மொத்தம், 350 போலீசார் பாதுகாப்ப பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தவிர, ஸ்டேஷனுக்குள், ரயில்வே பாதுகாப்பு படை துணை கமிஷனர் (சேலம்) ரபிஷ்பாபு தலைமையில், 60 ஆர்.பி.எப்., அதிகாரிகள் கண்காணிக்கின்றனர். பாதுகாப்பு காரணமாக, ஸ்டேஷனுக்கு ஆறு வழியும், போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

மூலக்கதை