நாமக்கல் பண்ணைகளில் ஒரு முட்டை 150 காசுகள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாமக்கல் பண்ணைகளில் ஒரு முட்டை 150 காசுகள்

நாமக்கல்: கோழிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற வதந்தியால், நாடு முழுவதும் முட்டை, கறிக்கோழி விற்பனை அடியோடு குறைந்து விட்டது. தமிழகத்தில் முட்டை உற்பத்தி கேந்திரமான நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணை தொழிலை கொரோனா வைரஸ் அடியோடு சாய்த்து விட்டது.

₹4க்கு விற்பனையான முட்டை தற்போது 150 காசுக்கு விற்பனை செய்யப்படும் நிலையை ஏற்படுத்திவிட்டது. உற்பத்தி செலவில் இருந்து பாதி விலைக்கு முட்டையை விற்பனை செய்ய பண்ணையாளர்கள் தயங்கினாலும், கோடைகாலமாக இருப்பதால் முட்டை அழுக தொடங்கிவிடும் என்ற பீதியில் குறைந்த விலைக்கு முட்டையை பண்ணையாளர்கள் தள்ளி விடுகின்றனர்.

வசதியான பண்ணையாளர்கள், தங்களது பண்ணைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மூலம் வேன்களில் முட்டையை நிரப்பி, கிராமம், கிராமமாக சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

30 அட்டை கொண்ட முட்டை ₹70-80 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து பண்ணையாளர்கள் கூறுகையில், கேரள மாநிலத்தில் பழைய நிலை எப்ப திரும்புகிறதோ அதுவரை நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயராது. கேரளா மாநிலம் முழுவதும் முட்டை விற்பனை அடியோடு குறைந்துவிட்டது.

10 முதல் 20 லட்சம் முட்டை தான் அங்கு செல்கிறது. இதனால் தினமும் 80 லட்சம் முட்டைகளை தமிழகத்தில் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் அந்த அளவுக்கு முட்டை மார்க்கெட் இல்லை.

இதனால் கிராமப்புறங்களுக்கு முட்டைகளை கொண்டு செல்கிறோம் என்றனர்.

.

மூலக்கதை