டெல்டாவில் தொடரும் பதற்றம் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 10வது நாளாக முஸ்லிம்கள் போராட்டம்: கூண்டுக்குள் அமர்ந்து கோஷம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்டாவில் தொடரும் பதற்றம் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 10வது நாளாக முஸ்லிம்கள் போராட்டம்: கூண்டுக்குள் அமர்ந்து கோஷம்

பாபநாசம்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்டாவில் இன்று 10வது நாளாக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். அப்போது அவர்கள் கூண்டுக்கள் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழகத்தன் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்டா மாவட்டங்களிலும் 10ம் நாளாக போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி தர்வேஸ் தைக்கால் மில்லத் நகரில் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி காத்திருப்பு போராட்டம் இன்று 5வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் சக்கராப் பள்ளி, அய்யம்பேட்டை, வழுத்தூர், பண்டாரவாடை, ராஜகிரி, வடக்கு மாங்குடி, உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த நூறுக்கணக்கான பெண்கள், சிறுவர், சிறுமியர், சர்வகட்சியினர், அமைப்பினர் பங்கேற்றனர்.

நேற்று போராட்ட களத்தில் ஒரு கூண்டு அமைத்து அதில் சிலர் அமர்ந்திருந்தனர். அதில், ‘’ சிறைச்சாலை, அகதிகள் முகாம் என்ற போர்டு தொங்கவிடப்பட்டிருந்தது.

கூண்டுக்குள் இருந்தவாறு குடியுரிமைசட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டனர். குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்தால் தங்கள் நிலைமை இப்படித்தான் ஆகும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் கூண்டு அமைத்துபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிராம்பட்டினம்: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று 6ம் நாளாக இஸ்லாமியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அனைத்து ஜமாஅத் மற்றும் அணைத்து இஸ்லாமிய அமைப்புகள் ஒருங்கிணைந்து குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் புதுத்தெரு திடலில் இன்று 10ம் நாளாக போராட்டம் நடந்து வருகிறது. கும்பகோணம்: கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகே அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் இஸ்லாமியர்கள் இன்று 4 வது நாளாக தேசியக் கொடியை ஏந்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் மீது குடந்தை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மன்னார்குடி : மன்னார்குடியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பெரியார் சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு நகர தலைவர் முகமது உசேன் தலைமை வகித்தார். 500க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

கூத்தாநல்லூர்: தமிழ்நாடு தவ்கீத் ஐமாத் சார்பில் கூத்தாந்ல்லூர் அருகே அத்திக்கடையில் கிளை தலைவர் இப்ராகீம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூத்தாநல்லூரில் இன்று 10ம் நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. புதுகை: புதுகை மாவட்டம் கறம்பக்குடி புளியஞ்சோலை பள்ளிவாசல் அருகே இன்று 6ம் நாளாக காத்திருப்பு போராட்டம் நடக்கிறது.

500க்கும் மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

மணமேல்குடி அடுத்த அம்மாபட்டினத்தில் இன்றும் போராட்டம் நீடிக்கிறது.

.

மூலக்கதை