காட்டுத்தீயில் சிக்கி 3 வன ஊழியர்கள் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
காட்டுத்தீயில் சிக்கி 3 வன ஊழியர்கள் பலி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் தேசமங்கலம் அருகே கொற்றம்பத்தூர் இல்லிக்குண்டு வனப்பகுதி உள்ளது. இங்கு இந்துஸ்தான் நியூஸ் பிரின்ட் நிறுவனத்துக்கு ெசாந்தமான அக்ேகஷியா மரங்கள் அடங்கிய எஸ்டேட் உள்ளது.

கடந்த 2 நாளாக இந்த வனப்பகுதியில் காட்டுத் தீ வேகமாக பரவி வந்தது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் வனக்காவலர்களான திவாகரன் (43), வேலாயுதன் (54), சங்கரன் (55) உள்பட 10க்கும் அதிகமானோர் தீயை அணைக்க காட்டு பகுதிக்குள் விரைந்து சென்றனர். அவர்கள் பல குழுக்களாக பிரிந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக திவாகரன், வேலாயுதன், சங்கரன் உள்பட 4 பேர் காட்டுத் தீயில் சிக்கி கொண்டு போராடினர்.

இதில் காட்டு தீயில் சிக்கிய ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக தப்பினார். உடனே அவர் விரைந்து சென்று மற்ற குழுவினருக்கும் தகவல் தெரிவித்தார்.

அவர்கள் மற்ற 3 பேரையும் மீட்க விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் திவாகரன், வேலாயுதன் ஆகிய 2 பேரும் தீயில் சிக்கினர்.

சிறிது நேரத்தில் உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து கிடந்தனர். சங்கரன் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார்.

அவரை மீட்டு திருச்சூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று நள்ளிரவு சங்கரன் பரிதாபமாக இறந்தார்.



இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தீயில் கருகி இறந்த வனத்துறை ஊழியர்கள் 3 பேரின் குடும்பத்தினருக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று கேரள வனத்துறை அமைச்சர் ராஜூ தெரிவித்து உள்ளார்.

.

மூலக்கதை