கொட்டினால் ரூ.1000 அபராதம் போட்டு கொடுத்தால் 500 ரூபாய்: ஊராட்சி நூதன நடவடிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொட்டினால் ரூ.1000 அபராதம் போட்டு கொடுத்தால் 500 ரூபாய்: ஊராட்சி நூதன நடவடிக்கை

சூலூர்: குப்பை கொட்டினால் ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அதை படம் பிடித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 500 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று  ஊராட்சி நூதன விளம்பரம் செய்துள்ளது. கோவை அடுத்த சூலூர் அருகே முத்துக்கவுண்டன்புதூர் ஊராட்சியின் முக்கிய பகுதியில் அப்பகுதி மக்கள் குப்பையை கொட்டி அசுத்தம் செய்து வந்தனர்.   ஊராட்சி ஊழியர்கள் மக்களிடம், குப்பை கொட்டக்கூடாது என்று பலமுறை அறிவுறுத்தினர். இருப்பினும் குப்பை கொட்டுபவர்கள் கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து இந்து கடவுள்களின் படத்துடன் முக்கிய இடங்களில் ஊராட்சி சார்பில் குப்பை கொட்டக்கூடாது என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்த  அறிவிப்பை மீறி குப்பை கொட்டி வருகின்றனர்.

இதனால், குப்பை கொட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் எனவும், குப்பை கொட்டும் நபர்களை படம் பிடித்து  கொடுத்தால் 500 ரூபாய் சன்மானம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை