மறுசுழற்சி! கழிவு பொருட்களை மீண்டும் பயன்படுத்தும் திட்டம்... பட்டியலை வெளியிட்டது நகராட்சி

தினமலர்  தினமலர்
மறுசுழற்சி! கழிவு பொருட்களை மீண்டும் பயன்படுத்தும் திட்டம்... பட்டியலை வெளியிட்டது நகராட்சி

சென்னை : சென்னையில் மறுசுழற்சி செய்யப்படும் பொருட்களை, எந்தெந்த நிறுவனங்களிடம் வழங்கலாம் என்ற பட்டியலை, மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:மாநகராட்சியில் தினமும், 4,880 டன் குப்பை உருவாகிறது. திடக்கழிவு மேலாண்மை விதி, 2016ன்படி, தினமும், 100 கிலோவிற்கு மேல் திடக்கழிவு உற்பத்தி செய்யும் அல்லது 5,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட வளாகத்தின் உற்பத்தியாளர்கள், தாங்களே மக்கும் குப்பையை, தங்கள் வளாகத்திலேயே மக்க செய்ய வைக்கவேண்டும்.மக்காத குப்பையை மறுசுழற்சி நிறுவனங்களிடம் வழங்க வேண்டும்.

அதேபோல், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், உணவகங்கள், விடுதிகள், தொழிற்சாலைகள் மற்றும் இதர நிறுவனங்கள், தாங்கள் உருவாக்கும் திடக்கழிவுகளை தாங்களே கையாள வேண்டும்.'நம் திடக்கழிவு நம் பொறுப்பு' என்பதால், பொதுமக்கள் வீடுகளிலேயே மக்கும், மக்காத குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும். மறுசுழற்சி செய்யும், 30 நிறுவனங்களை, மாநகராட்சி அங்கீகரித்துஉள்ளது.

இதற்கான பட்டியல், www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களிடம் மறுசுழற்சி பொருட்களை வழங்கலாம். மறுசுழற்சி நிறுவனங்களிடமிருந்து ஏதேனும் பிரச்னைகள் இருப்பின், [email protected] என்ற மின்னஞ்சல் மற்றும் 1913 எண்ணில் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை