கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க 185 மருத்துவ முகாம்கள் அமைப்பு : முதல்வர் அறிக்கை
சென்னை : கஜா புயலுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை விடுக்கப்பட்டது. புயல் பாதித்த மாவட்டங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க 185 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் புயல் பாதித்த பகுதிகளில் மக்களை அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று பரிசோதிக்க 216 நடமாடும் மருத்துவக் குழுக்கள் உள்ளது என்றும் முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.