100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு பென்னாகரம் பிடிஓ உள்பட 4 பேர் அதிரடி சஸ்பெண்ட்

தமிழ் முரசு  தமிழ் முரசு
100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு பென்னாகரம் பிடிஓ உள்பட 4 பேர் அதிரடி சஸ்பெண்ட்

தர்மபுரி: 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு செய்தது தொடர்பாக, பென்னாகரம் பிடிஓ உள்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 100 நாள் வேலை திட்டத்தில், பணி செய்யாமல் பணம் எடுத்து அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக, மாவட்ட  நிர்வாகத்திற்கு பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார் சென்றது. இதன்பேரில், கலெக்டர் மலர்விழி மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் உள்ள  ஊராட்சிகள் உதவி இயக்குனர்களுக்கு முறைகேடு தொடர்பாக ஆய்வு நடத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து 8 உதவி இயக்குனர்களும் அந்தந்த  ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் 100 நாள் திட்டத்தில் முறையாக பணம் செலவிடப்பட்டுள்ளதா என தணிக்கை செய்தனர்.

பென்னாகரம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்தானம் தணிக்கையில் ஈடுபட்டபோது அரக்காசனஅள்ளி ஊராட்சியில் 100  நாள் வேலை திட்டத்தில் பணி வழங்காமலே பணி செய்ததாக ₹3. 60 லட்சம் பணத்தை அதிகாரிகள் சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கடந்த சில  நாட்களுக்கு முன்பு, கலெக்டர் மலர்விழிக்கு அவர் அறிக்கை சமர்ப்பித்தார்.

இதையடுத்து 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக பிடிஓ  விமலன், உதவி பொறியாளர் அகமதுஷா, பணி மேற்பார்வையாளர் கண்ணன், அரக்காசனஅள்ளி ஊராட்சி செயலர் செல்வராஜ் ஆகிய 4 பேரை கலெக்டர்  சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

.

மூலக்கதை