அக்னி நட்சத்திரம் மே-4 ந்தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நீடிக்கிறது!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் மே- 4 ந் தேதி தொடங்கி, 28-ந் தேதி வரை நீடிக்கிறது. பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோடை காலம் என்பது பிப்ரவரியில் தொடங்கி ஜூன் மாதம் வரை நீடிக்கிறது. 

இந்த ஆண்டும் கடந்த பிப்ரவரி மாதமே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதேபோல மார்ச் மாதமும் தொடர்ந்து 100 டிகிரியை கடந்து வெப்பம் பதிவாகி வருகிறது. 

அதிகபட்சமாக 103 டிகிரியைக் கடந்து பதிவாகி உள்ளது. சில இடங்களில் அவ்வப்போது வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்தாலும் அது வெப்பத்தைக் குறைக்க உதவவில்லை. வெயிலின் காரணமாக, சில பகுதிகளில் குடி நீர்த் தட்டுப்பாடு தலைதூக்கி வருகிறது.

இந்த நிலையில் வருகிற மே 4- ந் தேதி அக்னி நட்சத்திரம்  தொடங்குகிறது. இது மே 28்- ந்தேதி வரை நீடிக்கிறது. இந்த 25 நாட்களும் வெயில் தாக்கம் உச்சகட்டத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது

மூலக்கதை