ரூ.15 ஆயிரம் கோடி! கடந்தது ரெப்கோ வங்கியின் வர்த்தகம்..மகளிருக்கு நுண்கடன் வசதி

தினமலர்  தினமலர்
ரூ.15 ஆயிரம் கோடி! கடந்தது ரெப்கோ வங்கியின் வர்த்தகம்..மகளிருக்கு நுண்கடன் வசதி

மதுரை:மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கீழ் நிறுவிய அரசு நிறுவனமான ரெப்கோ வங்கி பொன் விழா ஆண்டில் 15 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகத்தை கடந்துள்ளது.வங்கி வைப்புநிதி 8,669 கோடி ரூபாய், கடன் 6,337 கோடி ரூபாயாக உள்ளது. 108 கிளைகள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், 1300 ஊழியர்களை கொண்டது. கூட்டுறவுத் துறையில் உறுதியான நிதிநிலையுடன் 800 கோடி ரூபாய் நிகர மதிப்பு கொண்டது. கடந்த 5 ஆண்டுகளில் 100 கோடி ரூபாய்க்கு மேல் நிகர லாபம் பெற்றுள்ளது. இந்நிதியாண்டில் 110 கோடி ரூபாய்க்கு மேல் நிகர லாபம், பங்குதாரர்களுக்கு 20 சதவீதம் ஈவுத்தொகை நோக்கி முன்னேறி வருகிறது.தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை மூலம் கல்வி, மருத்துவ உதவித்தொகை, இன்சூரன்ஸ் என இந்நிதியாண்டில் 7.20 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 37,500 பேர் பயன் பெற்றுள்ளனர். இவ்வங்கியின் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான நுண் கடன் மற்றும் வீட்டுக்கடன் நிறுவனம் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்து வருகிறது என வங்கி மேலாண்மை இயக்குனர் இசபெல்லா தெரிவித்துள்ளார்.

மூலக்கதை