கந்துவட்டி ஒழிப்புச் சட்டத்தை காவல்துறை நடைமுறைப்படுத்தவே இல்லை: – வைகோ காட்டம்

என் தமிழ்  என் தமிழ்
கந்துவட்டி ஒழிப்புச் சட்டத்தை காவல்துறை நடைமுறைப்படுத்தவே இல்லை: – வைகோ காட்டம்

கந்துவட்டி ஒழிப்புச் சட்டத்தை, காவல்துறை நடைமுறைப்படுத்தவே இல்லை’ என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. மருதுபாண்டியர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தவர், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

‘2003-ம் ஆண்டு நவம்பர் மாதம், கந்து வட்டி ஒழிப்புச் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்தது. ஆனால், அந்தச் சட்டத்தைக் காவல்துறை கண்டுகொள்வது இல்லை. காவல்துறையில் கறுப்பு ஆடுகளாக உள்ள சில அதிகாரிகள், கந்துவட்டி குண்டர்களுக்குத் துணை போகிறார்கள்.நெல்லையில்தற்கொலைசெய்துகொண்டவர்கள் பலமுறை புகார் கொடுத்தும், யாரும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அந்தப் பகுதி காவல் நிலையத்தில் உள்ள போலீஸார்களை இடைநீக்கம் செய்ய வேண்டும். நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் வைக்க வேண்டும். இனி, இதுபோன்றொரு துயரமான சம்பவம் எங்கும் நடக்கக் கூடாது. நடிகர் விஷால் வீட்டில் ஜி.எஸ்.டி ரெய்டு என்பது பாசிச போக்காகும். மத்திய அரசின் மிரட்டல்போக்கு இதில் உள்ளது. இதில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்குப் பெரும்பங்கு உண்டு’’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை