ஜனவரி 27 இல் உள்ளூராட்சித் தேர்தல் – அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் முடிவு
உள்ளூராட்சித் தேர்தலை வரும் ஜனவரி 27ஆம் நாள் நடத்துவதற்கு, நேற்று நடந்த அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக சிறிலங்கா பிரதமர் தலைமையில் நேற்று அரசியல் கட்சிகளுடன் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் ஐதேக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜேவிபி, ஈபிடிபி, மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்திலேயே ஜனவரி மாதம் 27ஆம் நாள் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் வெளியிட்ட உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா,
“அம்பேகமுவ, நுவரெலிய பிரதேச சபைகளை பிரிக்கும் யோசனை தொடர்பான பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும். இதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்தவாரம் வெளியிடப்படும்.
அதையடுத்து, ஜனவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.” என்று கூறினார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
