ஜப்பானுடன் பலமான உறவைக் கட்டியெழுப்ப சிறிலங்கா பிரதமர் விருப்பம்

என் தமிழ்  என் தமிழ்
ஜப்பானுடன் பலமான உறவைக் கட்டியெழுப்ப சிறிலங்கா பிரதமர் விருப்பம்

ஜப்பானின் பிரதமராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள ஷின்சோ அபேக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும்,பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜப்பானிய நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 465 இடங்களில், 300 இற்கும் மேற்பட்ட இடங்களில் பிரதமர் ஷின்சோ அபேயின் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இதுகுறித்து கீச்சகத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்து பதிவு இட்டுள்ளார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கீச்சகத்தில் ஜப்பானியப் பிரதமருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதுடன், ஜப்பான்- சிறிலங்கா ஒத்துழைப்பை பலமாக கட்டியெழுப்புவதற்கு, எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை