கொழும்பு வந்தது பங்களாதேஸ் போர்க்கப்பல்

என் தமிழ்  என் தமிழ்
கொழும்பு வந்தது பங்களாதேஸ் போர்க்கப்பல்

பங்களாதேஸ் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

‘சொமுத்ர அவிஜன்’ என்ற பெயருடைய இந்தப் போர்க்கப்பல் நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த போது, சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

வரும் 26ஆம் நாள் வரை பங்களாதேஸ் போர்க்கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ள நிலையில் அதில் உள்ள கடற்படையினர் சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை