சம்பந்தனிடம் உடல் சோதனை செய்த மைத்திரியின் பாதுகாப்பு அதிகாரிகள்!

என் தமிழ்  என் தமிழ்
சம்பந்தனிடம் உடல் சோதனை செய்த மைத்திரியின் பாதுகாப்பு அதிகாரிகள்!

தேசிய தீபாவளி நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை, ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அவமரியாதையாக நடத்தியுள்ளனர் என்று சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 15ஆம் திகதி ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற தேசிய தீபாவளி நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய நிகழ்வு ஒன்றில் நாட்டின் பிரதான தமிழ் தலைவர் வருகை தரும் போது கௌரவமாக வரவேற்க வேண்டும் என்ற போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுபாப்பு அதிகாரிகளினால் சம்பந்தன் மீது உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் வெடி குண்டு சோதனையிடும் ஸ்கேனர் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு அவர் சோதிக்கப்பட்டுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் ஸ்கேன் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால் உள்ளே சென்ற சம்பந்தன் இரண்டாவது முறையாக மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். சம்பந்தனின் வயதினை கூட கருத்திற்கொள்ளாத ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர், அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் பரிசோதனையை மேற்கொண்டதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

தீபாவளி தினத்தில் இவ்வாறான சம்பவத்திற்கு முகம் கொடுத்த நாட்டின் மூத்த தமிழ் தலைவர் மனவருத்தமடைந்துள்ளார் என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மூலக்கதை