பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்கள் பரோல் நீட்டிப்பு செய்ய வேண்டும்: – அற்புதம்மாள் கோரிக்கை மனு
பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்கள் பரோல் நீட்டிப்பு செய்ய வேண்டும் என அவரின் தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சுமார் 26 ஆண்டுகள் சிறையிலிருந்தார். இந்த நிலையில், தந்தை உடல்நிலைக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், இதனால் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்குக் கோரிக்கை மனு அளித்தார்.
அவரது கோரிக்கையைப் பரிசீலனை செய்த தமிழக அரசு, நிபந்தனையுடன் பேரறிவாளனை ஒரு மாத பரோலில் விடுவித்தது. இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்துவரப்பட்டார்.இதனிடையே, தந்தை குயில்தாசனின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால், பரோலை நீட்டிக்கக்கோரி தமிழக அரசுக்குப் பேரறிவாளன் கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கியது. இதையடுத்து, உடல்நலக் குறைவால் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 3-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் தந்தை குயில்தாசனுக்குத் தொடர் சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்த வேளையில் மகனின் பரோல் முடிவடைதல் சிகிச்சையின் காலத்தில் பாதியிலேயே வீடு திரும்பியுள்ளார் குயில்தாசன். மேலும், பேரறிவாளனின் சகோதரிக்கும் சமீபத்தில் கற்பப்பை அறுவைசிகிச்சை நடந்திருப்பதன் காரணமாக அவரும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் இருவரது மருத்துவ சிகிச்சைக்கும் உடனிருந்து கவனித்துக்கொள்ள தனது மகன் பேரறிவாளனும் உடனிருந்தால் உறுதுணையாக இருக்கும் என்று எண்ணி பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்குமாறு அற்புதம்மாள் கோரிக்கை வைத்துள்ளார்.
‘பொதுவாக பேரறிவாளனை மற்ற சிறைவாசிகளோடு ஒப்பிட வேண்டிய அவசியமில்லை. பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கப்படும் எனத் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. விடுதலை பெறவிருக்கும் கைதிக்கு பரோல் வழங்குவதில் எந்தத் தடையும் இருக்காது என்பதால் இந்த முறையும் அவருக்குப் பரோல் நீட்டிப்பு வழங்குவதற்கான வாய்ப்புள்ளது’ என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
