மீண்டும் பரோல் கோரி சசிகலா மனு!
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா பரோல் கோரி மீண்டும் மனு அளித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில், சசிகலாவின் கணவர் நடராசன் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்காக சென்னை புறநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், கணவரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு 15 நாள்கள் பரோல் அளிக்கக் கோரி கர்நாடகச் சிறைத்துறை நிர்வாகத்திடம் சசிகலா விண்ணப்பித்தார்.ஆனால், நடராஜனின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறி தொழில்நுட்பக் காரணங்களுக்காக சசிகலாவின் பரோல் மனுவைச் சிறைத்துறை நிர்வாகம் நிராகரித்தது. கூடுதல் ஆவணங்களுடன் புதிய பரோல் மனுவைத் தாக்கல் செய்யவும் சசிகலாவுக்குச் சிறைத்துறை அறிவுறுத்தியது. இந்தநிலையில் கணவர் நடராசனின் உடல்நிலையைக் குறித்த விரிவான மருத்துவ அறிக்கையுடன், 15 நாள்கள் பரோல் அளிக்கக் கோரி சசிகலா மீண்டும் மனு அளித்துள்ளார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக் கண்காணிப்பாளர் சோமசேகரிடம் அவர் மனு அளித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
