மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிராக மகிந்த அணி போராட்டம்
அம்பாந்தோட்டை, மத்தல விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தப் போவதாக மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி எச்சரித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும,
“மத்தல விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு 40 ஆண்டுக்கு குத்தகைக்கு வழங்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக, வரும் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இந்த அரசாங்கத்தினால் அரச வளங்கள் விற்கப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம். அரச வளங்களை விற்பனை செய்வதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.
அரசாங்கம் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில், அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்.
சக்திவாய்ந்த நாடுகள் தமது போர்க்களமாக சிறிலங்காவைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கியதை அடுத்து, இந்தியாவை சமாதானப்படுத்தவதற்காகவே, மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் முற்படுகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
