கவலைக்கிடமான நிலையில் இருக்கும் கணவரை பரோலில் வந்து பார்க்க மறுத்த சசிகலா!
மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் கணவரை பார்க்க சசிகலா பரோலில் வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.சசிகலாவின் கணவர் நடராஜன், உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
நடராஜனுக்கு சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் அவர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.இந்நிலையில், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்த கர்நாடக அ.தி.மு.க செயலர் புகழேந்தி பரோல் விடுமுறையில் வந்து நடராஜனை பாருங்கள் என சசிகலாவிடம் கூறியுள்ளார்.
பரோல் கேட்பதற்கான மனுவில் கையெழுத்திடும் படி அவர் சசிகலாவிடம் கேட்க அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதே சமயம், நடராஜனின் உடல்நிலை பற்றி மட்டும் புகழேந்தியிடம் விசாரித்துள்ளார்.இது குறித்து மன்னார்குடி வட்டம் கூறுகையில், கவலைக்கிடமாக உள்ள கணவரை அறுவை சிகிச்சைக்கு முன் வந்து சசிகலா பார்க்க உறவினர்கள் விரும்புகின்றனர்.ஆனால், அவர் மறுத்துள்ளார். ஏற்கனவே, மகாதேவன், தினகரன் மாமியார் மரணத்திற்கும் சசிகலா வரவில்லை. இதனால், குடும்பத்தில் பிரச்னை வெடித்துள்ளது என கூறியுள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
