நடிகர்கள் தங்களது புகழை வைத்து அரசியலுக்கு வந்தால் வீழ்த்தப்படுவார்கள்: – திருமுருகன் காந்தி
நடிகர்கள் தங்களது புகழை வைத்து அரசியலுக்கு வந்தால் வீழ்த்தப்படுவார்கள்” என்று திருமுருகன் காந்தி கூறியுள்ளார். முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த தமிழர்களுக்காக, மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடத்த முயன்ற செய்த மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் தியாகராய நகரில் நடந்தது. இதில் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குப் பிறகு திருமுருகன் காந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக வந்த, நடிகர்கள் யாருடனும் எங்கள் இளைஞர்கள் போட்டோ கூட எடுக்கவில்லை. அவர்களை நாங்கள் பெரிதாக பார்க்கவில்லை. நடிகர் என்ற புகழை மட்டும் வைத்து அரசியலுக்குள் வந்தால் கண்டிப்பாக அவர்கள் தோல்வியை தழுவுவார்கள். எங்களுடைய அன்றாட போராட்டத்தில் வந்து கலந்து கொள்ளாதவர்களுக்கு மக்கள் வாய்ப்பு அளிக்க மாட்டார்கள். ஏற்கனவே, இதுப்ற விஷயங்களால் 40 ஆண்டு காலமாக தமிழகம் பின்தங்கியுள்ளது. மீண்டும் இதுபோன்ற செயல்களை செய்து தமிழகத்தை சீரழிக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
