தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை, திமுக எம்.பி க்கள் சந்தித்தனர்
டெல்லி : டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை, திமுக எம்.பி க்கள் சந்தித்தனர். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நடக்கும் முறைகேடுகள் தடுத்து நிறுத்த திமுக எம்.பி க்கள் வலியுறுத்தினார். சசிகலா அணியினர் சென்னை ஆர்கே நகரரில் 13 திருமண மண்டபங்களில் பணப்பட்டுவாடா செய்வதாகவும் புகார் அளித்தனர்.