மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி
சென்னை: ரஜினிகாந்த் தற்போது ‘காலா’ படத்தில் நடித்து வருகிறார். பா. ரஞ்சித் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது.
அதில் கலந்துகொண்டு 2 வாரங்கள் நடித்த பின் கடந்த வாரம் சென்னை திரும்பினார். அடுத்து, வரும் 24ம் தேதி முதல் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.
இதற்காக மீண்டும் மும்பை புறப்பட்டு செல்கிறார். சில நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்கும் அவர் பின்னர் படப்பிடிப்பிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு அமெரிக்கா செல்கிறார்.
ஜூலை முதல்வாரத்தில் அவர் அமெரிக்கா செல்வார் என்று தெரிகிறது. கடந்த 2 ஆண்டுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்ட ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார்.
இதையடுத்து கபாலி படத்தில் நடித்தார். தற்போது காலா படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் மீண்டும் அவர் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்கிறார்.
ஜூலை 12ம் தேதி அவர் இந்தியா திரும்புகிறார்.
.