ஆசியாவிலேயே மிகப் பெரிய திருவாரூர் ஆழித்தேரோட்டம் தொடக்கம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆசியாவிலேயே மிகப் பெரிய திருவாரூர் ஆழித்தேரோட்டம் தொடக்கம்!

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் ஆழித்தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். பல ஆயிரக்கணக்கானோர் இதனை கண்டுகளித்து வருகின்றனர்.

ஆசியாவிலேயே மிக உயரமான தேர்.. அழகான தேர்.. என்ற பெருமைகளுக்கு எல்லாம் உரியது திருவாரூர் தியாகராஜர் கோயில் தேர். திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

திருவாரூர் தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் ஆகும். திருவாரூர் தேர் 96அடி உயரமும் 360 டன் எடையும் கொண்டது.

இந்த தேர் 6 மீட்டர், 1.2 மீட்டர், 1.6 மீட்டர் 1.6மீட்டர் என 4 நிலைகளை கொண்டுள்ளது. இந்த தேர் பல நுண்ணிய கலை நயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு கடந்த 22ஆம் தேதியே மூலவர் தேருக்கு கொண்டுவரப்பட்டு அலங்காரப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இன்று காலை திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் ஆழித்தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனை அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ் ஆகியோ வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவாரூரில் குவிந்தனர். கீழ வீதியில் இருந்து ஆழித்தேரோட்டம் தொடங்கியுள்ளது, ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் செல்கின்றனர்.

தேரோட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரராபானர்ஜியும் பங்கேற்றுள்ளார். தேரோட்டத்தை முன்னிட்டு 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மூலக்கதை