மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு - 400 காளைகள் சீறிப்பாய்ந்தன

தமிழ் முரசு  தமிழ் முரசு
மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு  400 காளைகள் சீறிப்பாய்ந்தன

மணப்பாறை- திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு நடந்தது.
இதற்காக சவுக்கு கட்டைகளால் வாடிவாசல், பார்வையாளர்கள் பகுதியில் காளைகள் புகுந்து விடாமல் இருக்க இருபுறமும் தடுப்பு கட்டைகள் மற்றும் மேடை ஆகியவை அமைக்கப்பட்டிருந்தது. காளைகள் ஓடும் இடங்களில் தென்னை நார்கள் பரப்பப்பட்டிருந்தன.

ஜல்லிக்கட்டுக்கு, திருச்சி மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், கரூர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன.

அதேபோல் திருச்சி, சிவகங்கை, மதுரை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 350 வீரர்கள் வந்திருந்தனர்.

காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு துவங்கியது. முதலில் கோயில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.

அதன்பின் வெளியூர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட மாடுகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இந்த காளைகள் மைதானத்தில் சீறிப்பாய்ந்து சென்றன.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், பீரோ, கட்டில், ஹாட்பாக்ஸ் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

அதேபோல் வெற்றி பெற்ற காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

.

மூலக்கதை