சென்னை மாநகராட்சி மண்டலங்களில் அலங்கோலமான அரசு கட்டிடங்கள் - திறக்கப்படாத சமுதாயக்கூடம்; மக்கள் வேதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்னை மாநகராட்சி மண்டலங்களில் அலங்கோலமான அரசு கட்டிடங்கள்  திறக்கப்படாத சமுதாயக்கூடம்; மக்கள் வேதனை

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து மண்டலங்களிலும் மாநகராட்சிக்கு சொந்தமான பெரும்பாலான பழைய சமுதாய நலக்கூடங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட பல்வேறு அரசு கட்டிடங்கள் அலங்கோலமாகி அவல நிலையில் உள்ளன. மேற்கூரைகள் உடைந்து, பராமரிப்பே இல்லாமல் பாழடைந்து பரிதாபமாக காட்சியளிக்கின்றன.

குறிப்பாக, சென்னை வியாசர்பாடி, மகாகவி பாரதியார் நகர் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த பல ஆண்டுகளாக மாநகராட்சி சமூகக் கூடம் இயங்கி வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இக்கூடம் முறையான பராமரிப்பு இல்லாமல், அதன் மேற்கூரைகள் உடைந்து பயன்படுத்த முடியாத அளவுக்கு பாழாகி கிடக்கிறது.
இதேபோல் சென்னை பெரம்பூரை அடுத்த பெரியார் நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிறுத்தத்தின் மேற்கூரைகள், கடந்த டிசம்பர் மாதம் வீசிய வர்தா புயலில் பறந்து சென்றுவிட்டது.

என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

சென்னை மாநகராட்சியின் வடசென்னை பகுதி மண்டலங்களில் பல்வேறு அரசு கட்டிடங்கள் பராமரிக்கப்படாமல் பாழாகி வருவதை கண்கூடாக காணலாம். மாநகராட்சிக்கு சொந்தமான ஒரே கட்டிடத்தில் மருந்தகம், சமூகக்கூடம் மற்றும் பல்வேறு துறை அலுவலகங்கள் இயங்கி வரும்.

அங்கு வரும் மக்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் இல்லாமலும் உடைந்த நிலையிலும் காணப்படும். இதுதவிர, சென்னை மாநகராட்சியினால் பல்வேறு இடங்களில் பலகோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.

இக்கட்டிடங்கள் கட்டி முடித்து பல மாதங்களாகியும் இன்றுவரை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
உதாரணமாக, சென்னை சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் பல லட்சம் செலவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மாநகராட்சி சமுதாயக்கூடம் இன்றுவரை திறக்கப்படவில்லை. இதனால் அங்கு வசிக்கும் மக்கள்,  திருமணம், காது குத்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக அதிக பொருட்செலவில் தனியார் திருமண மண்டபங்களை நாடவேண்டிய நிலை நீடித்து வருகிறது.



இதேபோல், புளியந்தோப்பு பகுதியில் வ. உ. சி நகரில் மாநகராட்சி சார்பில் பல லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடமும் திறக்கப்படாமல் பாழடைந்து வருகிறது. அக்கட்டிட பகுதியில் புயலில் விழுந்த மரக்கழிவுகள் போட்டு வைத்துள்ளதால், அவை எந்நேரமும் தீப்பிடித்து அக்கட்டிடத்துக்கு பலத்த சேதம் உண்டாகலாம் என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

இதுதவிர, சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் மாநகராட்சி அலுவலகம் அருகே புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார மையம் இன்றுவரை மக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மருத்துவ வசதியில்லாமல் பல்வேறு பகுதிகளுக்கு அலைந்து வருகின்றனர்.

‘சென்னை மாநகராட்சியில் ஏன் இந்த சுணக்க நிலை?’ என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘மாநகராட்சி சார்பில் பலகோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் திறப்புவிழாவுக்காக காத்திருக்கிறது.

எனினும், கட்டிட திறப்பு தேதி குறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளின் அனுமதி கிடைக்கவில்லை. அவை கிடைத்ததும் விரைவில் திறக்கப்படும்’ என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

‘சென்னை மாநகராட்சியில் பல திறமையான பொறியாளர்களும் அதிகாரிகளும், இத்தகைய கட்டிடங்களை பராமரிப்பதில் தொடர்ந்து சுணக்கம் நிலவி வருவது ஏன்? அதிகாரிகளின் அதிகாரங்களை செயல்படுத்துவதில் தடைக்கற்களாக இருப்பது எது? தங்களை சார்ந்த மக்களின் நலனில் தொடர்ந்து அலைக்கழிப்பது ஏன்?

.

மூலக்கதை