போராட்டங்கள் நடந்தாலும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தலையிட முடியாது.. ஹைகோர்ட் கைவிரிப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
போராட்டங்கள் நடந்தாலும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தலையிட முடியாது.. ஹைகோர்ட் கைவிரிப்பு

சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தலையிட முடியாது என்று, சென்னை ஹைகோர்ட் கூறிவிட்டது.

சுப்ரீம்கோர்ட் விதித்த ஜல்லிக்கட்டு தடையை மீறும் வகையில் மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. அந்த தடையை நீக்க கோரி நடைபெற்ற வழக்கில் விசாரணை முடிந்து, தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த கோரி தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதை காரணம் காட்டி, சென்னை ஹைகோர்ட்டை தலையிட கோரி வழக்கறிஞர் கே.பாலு இன்று, ஓபன் கோர்ட்டில் இப்பிரச்சினையை எழுப்பினார்.

தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி சுந்தர் தலைமையிலான அமர்வு முன்னிலையில், இதுகுறித்த கோரிக்கையை வழக்கறிஞர் பாலு முன் வைத்தார். ஆனால், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையிலுள்ளதால் அதில் தாங்கள் தலையிட முடியாது என நீதிபதிகள் கூறிவிட்டனர்.

ஹைகோர்ட்டோ, தமிழக அரசோ, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இந்த நிலைமையில் எதையும் செய்ய முடியாது. மெரினா சாலை போராட்டங்கள் நடத்த ஒதுக்கப்பட்ட இடம் கிடையாது. எனவே இந்த சூழ்நிலையில் ஹைகோர்ட் இதில் தலையிட முடியாது என்று கூறிவிட்டது.

மூலக்கதை