தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த போர்க்கப்பல்கள்; மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன்...

தினத்தந்தி  தினத்தந்தி
தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த போர்க்கப்பல்கள்; மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன்...

தூத்துக்குடி,

தூத்துக்குடி துறைமுகத்துக்கு நேற்று 2 போர்க்கப்பல்கள் வந்தன. இந்த கப்பல்களை பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

போர்க்கப்பல்கள் வருகை

இந்திய கப்பல் படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். ரஞ்சித் மற்றும் ஐ.என்.எஸ். கோரா கப்பல்கள் கொச்சியில் இருந்து புறப்பட்டு நேற்று காலை 8.50- மணிக்கு தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு வந்தன. இதில் ஐ.என்.எஸ். ரஞ்சித் கப்பல் மிகப்பெரிய போர்க்கப்பல் ஆகும். இது முதல்முறையாக தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்துள்ளது.

இந்த போர் கப்பல் சுமார் 4 ஆயிரத்து 947 டன் எடை உடையது. இந்த கப்பல் மணிக்கு 35 நாட்டிக்கல் தூரம் பயணிக்க கூடியது. இந்த கப்பலின் பின்புறத்தில் பெரிய ஹெலிபேடு உள்ளது.

ஐ.என்.எஸ். கோரா கப்பல் சிறிய வகை ரோந்து கப்பல் ஆகும். இது 1,400 டன் எடை கொண்டது. இந்த ரோந்து கப்பல் மணிக்கு 25 நாட்டிக்கல் தூரம் பயணிக்க கூடியது. இந்த கப்பலிலும் ஹெலிபேடு வசதி உள்ளது.

மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்

இந்த கப்பல்களை பார்வையிட பல்வேறு பள்ளிகளில் இருந்து தேசிய பாதுகாப்பு படை மாணவர்கள் மற்றும் மாணவிகள் பலர் தூத்துக்குடி துறைமுகத்துக்கு நேற்று காலையில் வந்து இருந்தனர். அவர்கள் அந்த கப்பல்களை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

கப்பல்களை பார்வையிட்ட மாணவ, மாணவிகளுக்கு அந்த கப்பல்களில் உள்ள பல்வேறு வசதிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த 2 கப்பல்களும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வரை தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும்.

மூலக்கதை