பாமர மக்களை ஏமாற்றும் புரோக்கர்கள் பணம் திண்ணி கழுகுகள்!கலெக்டர் "சாட்டையை' சுழற்றுவாரா?

தினமலர்  தினமலர்
பாமர மக்களை ஏமாற்றும் புரோக்கர்கள் பணம் திண்ணி கழுகுகள்!கலெக்டர் சாட்டையை சுழற்றுவாரா?

திருப்பூர் :அப்பாவி மக்களுக்கு தூபம் போட்டு, இலவச பட்டா கோரும் மனு எழுதி கொடுக்கும், புரோக்கர்கள், இஷ்டத்துக்கு பணம் வசூலிப்பதாக ற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்பாவிகள் ஏமாறுவதை தடுக்க, கலெக்டர் லையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏழை, எளிய மக்கள்,

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, கலெக்டர் அலுவலகத்துக்கு படையெடுத்து வருகின்றனர். பட்டா கேட்டு மனு கொடுக்கலாம் என, அரசியல் கட்சியினர் ஆசை வார்த்தை கூறி அனுப்பி வைக்கின்றனர்.

இதனால், குறைகேட்பு கூட்டத்துக்கு வரும் பாமர மக்களிடம், மனு எழுதும் புரோக்கர்கள் தூபம் போட்டு, இலவச பட்டா கோரும் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து, ஒவ்வொரு வாரமும், பல்லாயிரம் ரூபாய் வரை "வசூல் வேட்டை' நடத்தி வருகின்றனர்.

இலவச பட்டா குறித்த பொய் பிரசாரத்தை நம்ப வேண்டாம் என்று கலெக்டர் அறிவிப்பு செய்த பிறகும் கூட, நேற்று, கலெக்டர் அலுவலகத்தில், மக்கள்

கூட்டம் குறையவில்லை. சென்ற வாரம், 4,300 பேர் பட்டா கேட்டு மனு கொடுத்திருந்த நிலையில், நேற்றைய குறைகேட்பு கூட்டத்தில், 4,700 பேர் மனு கொடுத்துள்ளனர்.


எவ்வளவு சுரண்டல்?

கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாப்பில் வந்து இறங்கும் பாமர மக்களை, அங்கு காத்திருக்கும், 50க்கும் அதிகமான புரோக்கர்கள், கூவிகூவி அழைக்கின்றனர்.

""ஆதார் நகல் இருக்கா? ரேஷன் கார்டு நகல் இருக்கா?'' என்று கேட்டு, அவர்கள் கையில் வைத்துள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, நகல்களை

வாங்கி, போட்டோவை பெற்று, ஒட்டிக்கொடுக்கின்றனர்.

கூட்டமாக வரும் பெண்களுக்கு, பட்டா கோரும் மனுவை பூர்த்தி செய்து கொடுத்து, 10 பேருக்கு, 300 ரூபாய் என்று வசூல் செய்கின்றனர். தனிநபர் அல்லது இரண்டு பேர் வந்தால், 80 ரூபாய் வசூலிக்கின்றனர்.இந்த புரோக்கர்கள், அப்பாவி மக்களிடம், "படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் ரசீது தருவார்கள். அதை வைத்து கொண்டால், பட்டா கிடைக்கும். உங்கள் வீட்டில் உள்ள மற்றவர்களின் பெயரிலும் தனித்தனியே மனு கொடுங்கள்.

ஒருத்தருக்கு கிடைக்காவிட்டாலும், மற்றவர்களுக்கு கிடைத்துவிடும். அதிர்ஷ்டம் இருந்தால், எல்லோருக்கும் கூட கிடைத்துவிடும்' என்றெல்லாம் கூறி, அவர்களிடம் ஆசையை தூண்டுகின்றனர்.


கலெக்டர் தலையிடணும்!


புரோக்கர்களை, கலெக்டர் அலுவலக பணியாளர்கள் என்று அப்பாவி மக்கள் நம்பி, கேட்ட தொகையை கொடுத்துவிட்டு, பட்டா மனுவுடன், வரிசையில் காத்திருந்து, நம்பிக்கையோடு மனு கொடுத்து வருகின்றனர்.


தவறான பிரசாரத்தை நம்பி ஏமாற்றப்படும் பாமர மக்களின் நிலையை, கலெக்டர் உணர்ந்து, மனு எழுதுவோரை, கலெக்டர் அலுவலகம் அருகே அனுமதிக்கக்கூடாது. மாறாக, மாவட்ட நிர்வாகம் தன்னார்வ அமைப்பினர் அல்லது அரசு ஊழியரை அமர்த்தி, மனு எழுதி கொடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கடந்த, 2014ல், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மனு எழுதி கொடுக்க, 50 ரூபாய் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது.அப்போதைய கலெக்டர் கோவிந்தராஜ், திடீர் ஆய்வு நடத்தினார்; தொடர்ந்து, அரசு ஊழியர்கள் அடங்கிய குழுவை அமைத்து, பாமர மக்களுக்கு இலவசமாக மனு எழுதி கொடுக்க நடவடிக்கை எடுத்தார். அதேபோல், மீண்டும் சரியான ஏற்பாடுகளை செய்ய, கலெக்டர் மனது வைக்க வேண்டும்.

மூலக்கதை