தமிழகம் முழுவதும் 1,475 வருவாய் உதவியாளர் பணியிடங்கள் காலி: இந்த ஆண்டே நிரப்ப தமிழக அரசு உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகம் முழுவதும் 1,475 வருவாய் உதவியாளர் பணியிடங்கள் காலி: இந்த ஆண்டே நிரப்ப தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 1,475 வருவாய் உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலமாகவும், பதவி உயர்வு மூலமும் நடப்பாண்டே நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உத்தரவின் பேரின் வருவாய் நிர்வாக இணை கமிஷனர் லட்சுமி, தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது: தமிழகம் முழுவதும், 1,475 வருவாய் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

இந்த பணியிடங்களை நடப்பாண்டில் (2019-2020) நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி, 91 வருவாய் உதவியாளர் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு மூலம் நிரப்ப, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டிஎன்பிஎஸ்சி விரைவில் முறையான அறிவிப்பை வெளியிடும்.

மீதமுள்ள 1,384 வருவாய் உதவியாளர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதன்படி, சென்னையில் 140 இடங்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 174 இடங்களம், திருவள்ளூர் மாவட்டத்தில் 80 இடங்களும், கோவையில் 55 இடங்களும் காலியாக உள்ளது.

இவைகளை இந்த ஆண்டு நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

.

மூலக்கதை