காகித பயன்பாட்டை நிறுத்த முடிவு ரயில்வே பணிகளை டிஜிட்டல் மயமாக்க திட்டம்

தினகரன்  தினகரன்
காகித பயன்பாட்டை நிறுத்த முடிவு ரயில்வே பணிகளை டிஜிட்டல் மயமாக்க திட்டம்

சேலம்: ரயில்வே பணிகள் அனைத்தையும் டிஜிட்டல் மயத்திற்குள் கொண்டு வந்து, காகித பயன்பாட்டை முற்றிலும் நிறுத்த முடிவெடுத்துள்ளனர். இதற்காக தொழில்நுட்ப மறுசீரமைப்பு திட்டத்தை தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் குழு ஈடுபட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பு திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரும்போது, அனைத்து வித ரயில்வே தகவல் அமைப்பு பணிகளும் டிஜிட்டல் மயத்தில் மேற்கொள்ளப்படும். காகித பயன்பாடு அறவே இருக்காது. ரயில்வே மண்டல அலுவலகங்கள், கோட்ட அலுவலகங்களுக்கிடையே நடக்கும் அனைத்து பணிகளும் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ள உரிய வசதி வாய்ப்புகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். இன்னும் 2 ஆண்டுகளுக்குள் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு முழுமையாக கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

மூலக்கதை