48 நாள் வைபவம்; 1.7 கோடி பக்தர்கள் தரிசனம்: ஆகமவிதிப்படி அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரத நாயகர்... 40 வருடம் கழித்து அடுத்த தரிசனம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
48 நாள் வைபவம்; 1.7 கோடி பக்தர்கள் தரிசனம்: ஆகமவிதிப்படி அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரத நாயகர்... 40 வருடம் கழித்து அடுத்த தரிசனம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கியது. ஜூலை 31ம் தேதி வரை சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நிறைவு நாளான நேற்று வரை நின்ற கோலத்தில் அருள்பாலித்தார். நேற்று வரை 1 கோடியே 7 ஆயிரத்து 500 பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர்.

48வது நாளான நேற்று காலை 5 மணியளவில் காவி மற்றும் ரோஜா நிற பட்டாடை அணிந்து காட்சியளித்தார். அவருக்கு சிறப்பு பூஜை தீபாராதைன செய்யப்பட்டது.

பின்னர் நடை சாத்தப்பட்டு மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பச்சை பட்டு உடுத்தி காட்சியளித்தார்.

அப்போது அத்திவரதருக்கு இட்லி, பொங்கல், தோசை படைக்கப்பட்டு சிறப்பு யாகம் செய்யப்பட்டது.

வெட்டிவேர்,  பச்சை கற்பூரத்தில் மகா தீபாராதனை நடத்தினர். 5 மணியளவில் அத்திவரதருக்கு புளியோரை, கல்கண்டு சாதம், ஓட்ட வடை, உளுந்து வடை, வெண் பொங்கல் உள்ளிட்ட 48 வகையான நெய்வேத்தியங்கள் படைக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கடைசி நாளான நேற்று வரதராஜ பெருமாள் ஸ்ரீேதவி, பூதேவியுடன் அலங்கரித்த தேரில் வசந்த மண்டபத்திற்கு வந்து, அத்திவரதருக்கு விடைகொடுத்தார். அதன்பிறகு தைல காப்பு யாகம், சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது.



இரவு 12. 11 மணியளவில் 16 முழம் பட்டுடுத்தி வெள்ளியில் பூநூல் அணிந்து அத்திவரதரை வசந்த மண்டபத்தில் இருந்து அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தின் பள்ளியறையில் சயன கோலத்தில் மேற்கு பக்கம் தலை வைத்தபடியும், கிழக்கு திசையில் கால் உள்ள அமைப்பில் அத்திவரதர் வைக்கப்பட்டார்.


.

மூலக்கதை