டாம்கோ திட்ட கடனுதவி வழங்குவதில் எட்டாத இலக்கு!

தினமலர்  தினமலர்
டாம்கோ திட்ட கடனுதவி வழங்குவதில் எட்டாத இலக்கு!

திருப்பூர்:'டாம்கோ' மற்றும் 'டாம்செட்கோ' திட்டங்களில், 100 சதவீதம் இலக்கை எட்ட, தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென, பயனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களின், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சுயதொழில் மூலம் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், பல்வேறு திட்டங்கள் உள்ளன.கூட்டுறவுத்துறை மூலம், குறைந்த வட்டியில் கடன் வழங்கும் 'டாம்கோ' மற்றும் 'டாம்செட்கோ' திட்டங்கள், ஏழை, எளிய மக்களின் ஏற்றத்துக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சிறுபான்மையின மக்கள், 'டாம்கோ' திட்டத்திலும், பிற்படுத்தப்பட்ட, மிகபிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் இன மக்கள், 'டாம்செட்கோ' திட்டத்திலும் பயன்பெறலாம்.மாவட்ட நிர்வாகம், இவ்விரு திட்டங்களிலும் சிறப்பு கவனம் செலுத்துவதில்லை; அதிகாரிகளும், விண்ணப்பத்தை 'பார்வேர்டு' செய்யும் பணியை மட்டுமே செய்கின்றனர். ஏழை, எளிய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, தமிழக அரசு நிர்ணயிக்கும் இலக்கை கூட எட்ட முயற்சி எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பர வலாக இருக்கிறது.இதுகுறித்து, சிறுபான்மையின பொதுமக்கள் கூறியதாவது:'டாம்செட்கோ' திட்டத்தில், சிறுவணிக கடன் மற்றும் தனிநபர் கடன் கேட்டு, கடந்தாண்டில் விண்ணப்பித்தோம். மாவட்டம் தோறும், திட்ட இலக்கு மூன்று கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது; அதில், 20 சதவீதம் கூட, கடன் வழங்கப்படவில்லை.
'டாம்கோ' திட்டத்திலும், சிறுவணிக கடன், தனிநபர் கடன் பிரிவில், ஒரு கோடி இலக்கு நிர்ணயித்தனர். அதில், 27 சதவீதத்தை மட்டுமே எட்டியுள்ளனர். அரசு நிதி ஒதுக்கியும், மக்களை சென்றடையவில்லை.சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, அரசு திட்டங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கலெக்டர் அலு வலகம், தாலுகா அலுவலகங்களில், தகவல் பலகைகளை வைக்க வேண்டும்.விண்ணப்பம் வரவில்லை என்று கூறி, கோப்புகளை முடித்துவிடாமல், தமிழக அரசு நிர்ணயிக்கும் இலக்கை அடைய, மாவட்ட நிர்வாகங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை