போலீசுடன் லாட்ஜில் தங்கிய ஆசிரியை தற்கொலை ஏன்?.. பரபரப்பு தகவல்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
போலீசுடன் லாட்ஜில் தங்கிய ஆசிரியை தற்கொலை ஏன்?.. பரபரப்பு தகவல்கள்

மயிலாடுதுறை: போலீஸ்காரருடன் லாட்ஜில் தங்கிய மயிலாடுதுறை ஆசிரியை தூக்கு மாட்டி தற்ெகாலை செய்து கொண்டது பற்றி பரபரப்பு தகவல்கள் ெவளியாகி உள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த செம்பனார்கோவில் மகாராஜபுரத்தை சேர்ந்த ஜெயபால் மகள் சித்ரா (30).

பொறையாரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா சிறுபுலியூர் துரைசாமி மகன் ராஜ்குமார்(32).

இவர் திருச்சியில் உள்ள நம்பர் 1 தமிழ்நாடு சிறப்பு பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். தற்போது திருச்சி மத்திய சிறையில் பாதுகாப்பு பணியில் உள்ளார்.

இருவருக்கும் இருதரப்பு பெற்றோரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி திருமண நிச்சயதார்த்தம் முடிந்து, வரும் செப்டம்பர் 16ம் தேதி கொல்லுமாங்குடி கிராமத்தில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது.



பத்திரிகை அச்சடிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே ராஜ்குமாரும், சித்ராவும் செல்போனில் அடிக்கடி பேசினர்.

பெண் வீட்டிற்கு ராஜ்குமார் வருவதும், இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவதும் வாடிக்கையாக இருந்தது. இதை பெற்றோர் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் (ஆக. 15) ராஜ்குமார், சித்ராவை அழைத்து கொண்டு தான் வேலைபார்க்கும் திருச்சிக்கு கிளம்பினார். அங்கு கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கினர்.

காலை 9. 30 மணியளவில் ராஜ்குமார் மட்டும் வெளியே கிளம்பி சென்றார். மீண்டும் 10. 20 மணியளவில் போன் செய்த போது சித்ரா போனை எடுக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த ராஜ்குமார் ஓட்டலுக்கு வந்து பார்த்த போது, கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. பின்னர் கதவை உடைத்து பார்த்த போது, சித்ரா தூக்கு மாட்டி சடலமாக தொங்கினார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார், சடலத்தை இறக்கி ஒரு ஆம்புலன்சில் ஏற்றி சித்ராவின் ஊரான செம்பனார்கோவில் மகாராஜபுரத்துக்கு கொண்டு வந்தார்.

அங்கு சித்ராவின் சடலத்தை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இதுபற்றி செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் சென்று சடலத்தை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராஜ்குமாரை அழைத்து விசாரணை நடத்தினர்.

இதுபற்றி போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, ‘‘சித்ரா ஏற்கனவே ஒருவரிடம் பழகி இருப்பதாக ராஜ்குமாருக்கு சந்தேகம் இருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக 2 பேருக்கும் பலமுறை தகராறு நடந்துள்ளது.



அதேபோல் திருமண ஏற்பாடுகளை கவனிக்காமலும், தோழிகளுக்கு பத்திரிகை கொடுக்காமலும் சித்ரா இருந்துள்ளார். இதை தாய் கண்டித்ததால், அவருடன் கோபித்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

இது தெரிந்ததும் சித்ராவை, செல்போனில் தொடர்பு கொண்டு ராஜ்குமார் சமாதானம் பேசி உள்ளார். பின்னர் அவரையும் அழைத்துக்கொண்டு திருச்சிக்கு சென்றுள்ளார்.

இந்தநிலையில் தான் சித்ரா தற்கொலை செய்துள்ளார்.

எனினும் திருச்சி போலீசார் வந்து விசாரித்த பிறகு தான் தற்கொலைக்கான முழு காரணமும் தெரியவரும்’’ என்றனர்.

.

மூலக்கதை