விதிமீறும் வாகன ஓட்டிகளின் பர்ஸ் பழுத்துரும்!புதிய பைன் அமலுக்கு வந்தது!

தினமலர்  தினமலர்
விதிமீறும் வாகன ஓட்டிகளின் பர்ஸ் பழுத்துரும்!புதிய பைன் அமலுக்கு வந்தது!

கோவை:போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகை, பத்து மடங்கு அதிகமாக உயர்த்தப்பட்டு, நடைமுறைக்கு வந்துள்ளது; இனி, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால், 'பர்ஸ்' காலியாகி விடும்.போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு, அபராதம் விதிக்க பரிந்துரைக்கும் மோட்டார் வாகன திருத்த மசோதாவுக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இந்த திருத்தப்பட்ட மசோதாவில், பழைய அபராத கட்டணத்தை காட்டிலும், பத்து மடங்கு அதிக அபராதம் வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.புதிய 'பைன்' வந்தாச்சு!புதிய மசோதாவில், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்குதல், அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், ரேஷ் டிரைவிங், சிறுவர்கள் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களை, கடுமையாக கண்டிக்கும் வகையில், உச்சபட்ச அபராதம் வசூலிக்கப்பட உள்ளது.

இந்த புதிய அபராத தொகை, நேற்று முதல் கோவையில் போக்குவரத்து போலீசார் அமல்படுத்தியுள்ளனர்.இதன்படி, அவசர கால வாகனங்களான ஆம்புலன்ஸ், தீயணைப்பு போன்ற வாகனங்களுக்கு வழிவிடாமல் சென்றால், குறிப்பிட்ட வாகன ஓட்டிக்கு, 10 ஆயிரம் ரூபாய்; அதிவேக பயணத்துக்கு, ஆயிரம் முதல், 2 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
லைசென்ஸ் ரத்து!
வாகனத்துக்கு உரிய காப்பீடு இல்லை என்றால், 2 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். 'ஹெல்மெட்' அணியவில்லை என்றால், 1,000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். காரில் சீட் பெல்ட் அணியாவிட்டாலும், 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். இத்துடன் குறிப்பிட்ட வாகன ஓட்டியின் ஓட்டுனர் உரிமம் மூன்று முதல், ஆறு மாதங்கள் வரை ரத்து செய்யப்படும்.சிக்னல் விதிமீறல்கள் உட்பட குறைந்தபட்ச அபராத தொகையாக, 500 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது. அதேபோன்று போக்குவரத்து போலீசாரின் உத்தரவுக்கு கட்டுப்படாமல் செயல்பட்டால், 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
உரிமம் இல்லாத வாகனங்களை, அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துபவர்களுக்கு, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அந்த வாகனத்தை ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இயக்கினால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.அபாயகரமான முறையில் வாகனத்தை இயக்கினால், 5 ஆயிரம் ரூபாயும், மது அருந்தி வாகனத்தை இயக்கினால், 10 ஆயிரம் ரூபாய் வரையும் வசூலிக்கப்படும்.
அதிகாரிகளுக்கு டபுள்!விதிகளை அதிகாரிகளே மீறினால், அவர்களிடம் இரு மடங்கு அபராதம் வசூலிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளதுதான், இதில் ஹைலைட்!போக்குவரத்து விதிமீறல்கள் பழைய அபராதம் புதிய அபராதம்1. மது அருந்தி வாகனம் ஓட்டுவது ரூ.2,000 வரை ரூ.10,0002. 'ஹெல்மெட்' அணியாதது ரூ.100 ரூ.1,0003. சீல் பெல்ட் அணியாதது ரூ.100 ரூ.1,0004. அதிவேகம் ரூ.400 ரூ.1,000-2,0005. அதிக பாரம் ஏற்றுதல் ரூ.2-5 ஆயிரம் ரூ.20,0006. ஓட்டுனர் உரிமம் இல்லாதது ரூ. 500 ரூ.5,0007. போக்குவரத்து விதிமீறல்களுக்கு பொது அபராதம் ரூ.100 ரூ.500 சிறுவர்கள் பிடிபட்டால்பெற்றோருக்கு தண்டனை!
போக்குவரத்து போலீசார் கூறுகையில், 'புதிய போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, சிறுவர்கள் வாகனத்தை இயக்கினால், அந்த வாகனத்தின் உரிமையாளர் அல்லது சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தண்டனை வழங்கப்படும். அந்த வாகனத்தின் பதிவும் ரத்து செய்யப்படும். இந்த வகையில், மூன்றாண்டுகள் சிறை தண்டனை மற்றும், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதேபோன்று அனைத்து வகையான விதிமீறல்களுக்கும், அபராதம் வசூலிக்கப்படும்' என்றனர்.

மூலக்கதை