கீழடி அகழாய்வில் திருப்பம்: எலும்புகள் கண்டுபிடிப்பு- தொல்லுயிரியல் குழு ஆய்வு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
கீழடி அகழாய்வில் திருப்பம்: எலும்புகள் கண்டுபிடிப்பு தொல்லுயிரியல் குழு ஆய்வு!

கீழடியில் நடந்த அகழாய்வில் புதிய திருப்பமாக, எலும்புகள் கண்டு எடுக்கப்பட்டன. இவை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் எலும்புகளா  என தொல்லுயிரியல் குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

 சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு பணி ரூ.47 லட்சம் செலவில் நடந்து வருகிறது. 50 நாட்களாக நடந்து வரும் அகழாய்வில் இதுவரை 7 ஏக்கர் பரப்பளவில் குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. 


இதுவரை தாழிப்பானை, பானை ஓடுகள், பானை மூடிகள், இரட்டைச்சுவர், உறைகிணறு போன்றவை கண்டறியப்பட்டன. 


அகழாய்வில் கட்டிடங்கள், பொருட்கள் போன்றவையே இதுவரை கிடைத்து வந்தன. தற்போது புதிய திருப்பமாக, போதகுரு என்பவரது நிலத்தில் நடந்த அகழாய்வில் எலும்புகள் கிடைத்து உள்ளன.  


இந்த எலும்புகள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் எலும்புகளா அல்லது விலங்குகளின் எலும்புகளா என ஆய்வு செய்ய உள்ளனர். 


இதற்காக சென்னையில் இருந்து தொல்லுயிரியல் குழுவினர் கீழடிக்கு வர உள்ளனர். அவர்கள் வந்து ஆய்வு நடத்திய பின் தான் எலும்புகள் குறித்த முழு விபரமும் தெரியவரும் என கூறப்படுகிறது

மூலக்கதை