திருவள்ளூர் அருகே இலவச லேப்-டாப் கேட்டு பள்ளி மாணவிகள் ஆர்ப்பாட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவள்ளூர் அருகே இலவச லேப்டாப் கேட்டு பள்ளி மாணவிகள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மப்பேடு கூட் சாலையில், கீழச்சேரி அரசு உதவிபெறும் பள்ளியின் மாணவிகள் லேப்-டாப் கேட்டு இன்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் இலவச லேப்-டாப் வழங்கப்பட்டு வருகிறது. உயர்நிலை கல்விக்கு உதவியாக இருப்பதால் இந்த திட்டத்துக்கு மாணவர்களிடையே வரவேற்பு உள்ளது. நடப்பாண்டில் படிக்கும் மாணவர்களுக்கான லேப்டாப் வழங்கும் பணி நேற்று திருவள்ளூர் மாவட்டம் போரூர், கீழ்மணம்பேடு, மணவாளநகர் ஆகிய இடங்களில் நடந்தது.

மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வினியோகிப்பதற்காக இலவச லேப்-டாப்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கீழச்சேரி அரசு நிதியுதவி பெரும் பள்ளியில், பிளஸ் 2 பயிலும் மாணவிகளுக்கு இலவச லேப்-டாப் நேற்று வழங்கப்பட்டது.

மிகவும் குறைந்தளவில் பள்ளிக்கு லேப்-டாப் வழங்கப்பட்டதால், 100க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு நேற்று இலவச லேப்-டாப் வழங்கப்படவில்லை. மற்ற மாணவிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள், விடுபட்ட தங்களுக்கும் இலவச லேப்-டாப்களை வழங்க கோரி மப்பேடு போலீஸ் நிலையம் அருகே கூட் சாலையில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர். தகவலறிந்து மப்பேடு போலீசார் விரைந்து சென்று, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சம்பவ இடத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வர மறுத்து விட்டதால், மாணவிகளிடம் சமாதான பேச்சுவார்த்தையில் போலீசார் ஈடுபட்டனர்,

.

மூலக்கதை