குடிமராமத்து பணிகளை முறையாக மேற்கொள்ள அறிவுறுத்தல்! ஒருங்கிணைந்து செயல்பட கலெக்டர் உத்தரவு

தினமலர்  தினமலர்
குடிமராமத்து பணிகளை முறையாக மேற்கொள்ள அறிவுறுத்தல்! ஒருங்கிணைந்து செயல்பட கலெக்டர் உத்தரவு

மதுரை : கண்மாய், குளங்களில் குடிமராமத்து பணிகளை ஒருங்கிணைந்து முறையாக மேற்கொள்ள வருவாய், பொதுப்பணி, நிலஅளவை, உள்ளாட்சித்துறையினருக்கு மதுரையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

இம்மாவட்டத்திலுள்ள 11 தாலுகாக்களில் முதற்கட்டமாக 115 கண்மாய், குளங்களில் குடிமராமத்து பணிகள் நடக்க உள்ளன. உசிலம்பட்டி, மேலுார் உள்ளிட்ட சில தாலுகாக்களில் அரசியல் தலையீடு இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். ஒரே கண்மாய்க்கு இரு விவசாய குழுக்களும் சில இடங்களில் அமைக்கப்பட்டன.

குடிமராமத்து பணிகளை முறையாக மேற்கொள்வது குறித்து அனைத்து துறையினர் பங்கேற்ற கூட்டம் கலெக்டர் ராஜசேகர் தலைமையில் மதுரையில் நடந்தது. பயிற்சி கலெக்டர் ஜோதி சர்மா, உதவி கலெக்டர் பயிற்சி கோகிலா, டி.ஆர்.ஓ., செல்வராஜ், பொதுப்பணித்துறை பெரியாறு வைகை நீர்வள ஆதார செயற் பொறியாளர் சுப்பிரமணியன், ஆர்.டி.ஓ.,க்கள் முருகானந்தம், கண்ணகி, முருகேசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

கலெக்டர் பேசியதாவது: குடிமராமத்து பணி மேற்கொள்ளப்படும் நீர் ஆதாரங்களை முதலில் நிலஅளவை துறையினருடன் இணைந்து அளவீடு செய்ய வேண்டும். கண்மாயிலுள்ள சீமை கருவேல மரங்களை வனத்துறையினர் விவசாயிகளுடன் இணைந்து முழுமையாக அகற்ற வேண்டும். கண்மாய் ஆயக்கட்டுதாரர்களை மட்டுமே குழுவில் இணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு கண்மாய்க்கு ஒரு குழுவை மட்டுமே ஏற்படுத்த வேண்டும். பருவ மழை துவங்கும் முன் குடிமராமத்து பணிகளை முடிக்க வேண்டும். மாவட்ட அதிகாரிகள் இப்பணிகளை அடிக்கடி கண்காணிக்க வேண்டும் என்றார்.

மூலக்கதை