திருப்போரூர் கோயிலில் கந்தசஷ்டி நிறைவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருப்போரூர் கோயிலில் கந்தசஷ்டி நிறைவு

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது.   விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. தங்க குதிரை வாகனத்தில்  வந்து, தங்கவேல் கொண்டு சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்தார்.

இதையடுத்து நேற்று காலை கந்தசஷ்டி கொடியிறக்கம் நடந்தது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை 6. 30 மணிக்கு முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது.

இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இதையடுத்து தங்க மயில் வாகனத்தில் திருக்கல்யாண கோலத்துடன் முருகப்பெருமான் நான்கு மாடவீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

.

மூலக்கதை