சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி நியமனம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி வினித் கோத்தாரி சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். 

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த மூத்த நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவர் வரும் 22ம் தேதிக்குள், அங்கு பொறுப்பேற்க வேண்டும். 

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது காலியிடத்தை நிரப்ப கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வினித் கோத்தாரியை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. அவர் வரும் 24ம் தேதிக்குள், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

மூலக்கதை