ஏற்றுமதியை அதிகரிக்க ஸ்மார்ட் பம்ப் திட்டம்

தினகரன்  தினகரன்
ஏற்றுமதியை அதிகரிக்க ஸ்மார்ட் பம்ப் திட்டம்

கோவை: தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் (சீமா) தலைவர் கிருஷ்ணகுமார் கூறியதாவது: கோவையில் மட்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட ஐ.எஸ்.ஐ., தர குறியீடு பெற்ற தரமான பம்ப்செட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உள்ளது. எனினும் இந்திய பம்ப்செட் நிறுவனங்களின் ஏற்றுமதி சர்வதேச அளவில் ஒரு சதவீதம் மட்டுமே உள்ளது. இதனை உயர்த்த தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம், இன்ஜினியரிங் ஏற்றுமதி கழகம் மூலம் பல்வேறு பயிற்சி வகுப்புகள் மற்றும் பல்வேறு நாடுகளில் நடைபெறும் இன்ஜினியரிங் சார்ந்த பொருட்காட்சியில் பங்கெடுத்து இந்திய தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய உற்பத்தியாளர்களை தயார்படுத்தி வருகிறோம்.இந்நிலையில், கோவையிலுள்ள சிறு தொழில் அறிவியல் தரப்பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி மையம் மூலம் ஐ.ஐ.டி., சென்னை, ஐ.ஐ.எஸ்.சி., பெங்களூர் மற்றும் இன்ஜினியரிங் ஏற்றுமதி கழகம், ஆகியவற்றுடன் இணைந்து மத்திய அரசின் நிதி உதவியுடன் ‘ஸ்மார்ட் பம்ப் திட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பம்ப்செட்களின் தொழில் நுட்பம் உயர்ந்து ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.

மூலக்கதை