பணியில் இருந்த எஸ்எஸ்ஐயை தாக்கிய ஹோம்கார்டு கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
பணியில் இருந்த எஸ்எஸ்ஐயை தாக்கிய ஹோம்கார்டு கைது

தண்டையார்பேட்டை: காசிமேடு பகுதியில்  இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்எஸ்ஐயை சரமாரியாக தாக்கிய ஹோம்கார்டை கைது செய்து  போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை எழும்பூரை சேர்ந்தவர் ராஜசேகர் (55). காசிமேடு காவல்நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக வேலை செய்து வருகிறார்.

இவர், நேற்று இரவு பணிக்கு சென்றுள்ளார். பின்னர், காசிமேடு தாண்டவன் தெரு பகுதியில் ரோந்து சென்றுள்ளார்.

அப்போது அந்த பகுதியில் ஆசாமி ஒருவர் போதையில் ரகளையில் ஈடுபட்டிருந்தார். இதை பார்த்து அங்கு சென்ற ராஜசேகர், ஆசாமியை வீட்டுக்கு செல்லும்படி  கூறியுள்ளார்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த ஆசாமி, ராஜசேகரை சரமாரியாக தாக்கி சட்டையை கிழித்துள்ளார்.



இதுகுறித்து  தகவல் அறிந்து வந்த சக போலீஸ்காரர்கள் காயமடைந்த ராஜசேகரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில், காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதில், காசிமேடு புதுமனை குப்பத்தை சேர்ந்த தனசேகர் (34) என்பதும் ஏற்கனவே காசிமேடு பகுதியில் ஹோம்கார்டாக வேலை செய்ததும்  தெரியவந்துள்ளது. பணியில் இருந்த எஸ்எஸ்ஐயை ஹோம்கார்டாக வேலை செய்தவர் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபோல் பெரம்பூரில் ஒரு போலீஸ்காரர், ராயபுரத்தில் எஸ்ஐ உள்பட சென்னையில் பல இடங்களில் போலீஸ்காரர்கள் தாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை