பெட்ரோல் பரவியதால் வயல்களில் திடீர் தீ: உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெட்ரோல் பரவியதால் வயல்களில் திடீர் தீ: உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே லாரி விபத்தின் போது, வயல்களில் பரவிய பெட்ரோலை தீயணைப்பு படையினர் அகற்றாமல் சென்றதால் அங்கு திடீரென தீப்பிடித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற டேங்கர் லாரி  சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

டேங்கரில் பெட்ரோல் இருந்ததால் சாலையில் ஆறாக ஓடியது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீருடன் நுரை கரைசலை கலந்து அடித்து தீ விபத்து ஏற்படாமல் தடுத்தனர்.

3 கிரேன்கள் உதவியுடன் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. லாரி கவிழ்ந்து பெட்ரோல் வழிந்தோடியதால் அருகில் உள்ள வயல்களுக்கும் பரவியது.

 இதனை தீயணைப்பு வீரர்கள் அகற்றாமல் விட்டுச்சென்று விட்டனர்.

இந்நிலையில், நேற்று அப்பகுதியில் விவசாய நிலத்தில் பெட்ரோல் பரவி இருந்த பகுதியில் மர்மநபர்கள் தீவைத்து விட்டு சென்றுள்ளனர். அப்போது காற்றின் வேகத்தால் தீ பரவியது.

சுமார் ஒரு ஏக்கர் நிலம் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து, சிறுவர்கள் தீயின் விபரீதம் தெரியாமல், அங்கிருந்த செடி, கொடிகளை கொண்டு தீயை அணைத்தனர்.

இதுதொடர்பான வீடியோ, தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


.

மூலக்கதை