அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவிப்பு; அதிகாரிகள் நடவடிக்கை தேவை

தினமலர்  தினமலர்

ராமநாதபுரம்;ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை ஊராட்சியில் உள்ள பால்கரை, அச்சடிபிரம்பு, கோவிந்தனேந்தல், வன்னிகுடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகின்றனர்.
பால்கரை கிராமத்தில் குடிநீர் ஆதாரங்கள் இல்லாத நிலை உள்ளது. இங்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு இன்று வரை காட்சிப்பொருளாக உள்ளது. மூன்று ஆண்டுகளாக குடிநீர் கிடைக்கவில்லை. 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தினசரி லாரி, டிராக்டர் டேங்கர்களில் வரும் குடிநீர் குடம் 12 ரூபாய்க்கும், புழகத்திற்கு நீர் குடம் 7 ரூபாய்க்கும் வாங்குகின்றனர்.
பால்கரைப்பகுதிக்கு ரோடு மோசமாக உள்ளது. வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. தெருவிளக்குகள் எரிவதில்லை. கருப்பாயியம்மாள்: எங்கள் கிராமத்தில் குடிநீரைப்பார்த்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. ஒரு குடும்பத்தினர் குடிநீருக்கு 400 ரூபாய் வரை செலவிடுகிறோம் என்றார்.கணபதியம்மாள்: தெருவிளக்குகள் எரியாததால் ஊருக்குள் இரவு நேரத்தில் பெண்கள் நடமாட முடியாமல் அச்சத்தில் இருக்கிறோம். என்றார்.பசுமலை: பஸ் வந்து செல்ல சரியான ரோடு இல்லை. ரேஷன் கடைகளிலும் பொருட்கள் கிடைப்பதில்லை, என்றார்.

மூலக்கதை