சுங்க வரி வசூல் மையத்தை அகற்ற வேண்டும்

தினமலர்  தினமலர்

வத்தலக்குண்டு;'திண்டுக்கல் - குமுளி ரோட்டில் 'டோல்கேட்' இல்லை' என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளதால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.திண்டுக்கல், குமுளி வரை நான்கு வழிச்சாலை திட்டம் தயாரிக்கப்பட்டு பின் இருவழிச்சாலையாக மாற்றப்பட்டது. வத்தலக்குண்டு, தேவதானப்பட்டி, வீரபாண்டி ஆகிய ஊர்களில் பைபாஸ் அமைக்கப்பட்டது.
தேனியில் பணிகள் நடக்கின்றன. விரைவில் சின்னமனுார், உத்தமபாளையம், கம்பம், கூடலுாரில் பைபாஸ் அமைய உள்ளது.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் கூறுகையில், ''மதிப்பீடுகளை உயர்த்த ஒப்பந்ததாரர்கள் வலியுறுத்தியதால் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது அரசு அனுமதித்து உள்ளதால் பணிகள் விரைவில் துவங்கும். இந்த ரோட்டில் 'டோல்கேட்' கிடையாது'' என்றனர்.ஆனால் ஓராண்டிற்கு முன்பே வத்தலக்குண்டு அருகே சுங்க வரி வசூலிப்பு மையம் நிறுவப்பட்டு உள்ளது. தற்போது 'டோல்கேட்' இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள வசூல் மையத்தை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலக்கதை