மதுராந்தகம் அருகே திறந்தவெளியில் வீணாகும் நெல் மூட்டைகள்: பாதுகாப்பதில் அலட்சியம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மதுராந்தகம் அருகே திறந்தவெளியில் வீணாகும் நெல் மூட்டைகள்: பாதுகாப்பதில் அலட்சியம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே திறந்தவெளியில் நெல் மூட்டைகள் அடுக்கி வைத்திருப்பதால், அவை மழையில் நனைந்து வீணாகி வருகின்றன. இவற்றை பாதுகாப்பதில் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.

மதுராந்தகம் அருகே சூனாம்பேடு மாநில நெடுஞ்சாலையை ஓட்டி, குருகுலம் எனும் பகுதியில் அரசு தற்காலிக நெல் சேகரிப்பு கிடங்கு உள்ளது. இங்கு விவசாயிகளிடம் பெறப்பட்ட சுமார் 8 ஆயிரம் நெல் மூட்டைகள் திறந்தவெளியில், தார்பாய் போட்டு மூடி பாதுகாக்கப்படாமல் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன.

இதனால் தற்போது பெய்து வரும் மழையிலும், வெயிலிலும் அந்த நெல் மூட்டைகள் மண்ணோடு மண்ணாக சேதமாகி வருகின்றன. ஏற்கெனவே இதேபோல் மதுராந்தகத்தில் பெய்த மழையில், அங்கு திறந்தவெளியில் வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் பலத்த சேதமடைந்து உள்ளன.

மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திறந்தவெளியில் அடுக்கியிருக்கும் நெல் மூட்டைகளை முறையாக பாதுகாப்பதில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர்.

எனவே, விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்து, அதை முறையாக பாதுகாக்காமல் வீணடிப்பது அரசு அதிகாரிகளின் பொறுப்பற்ற நடவடிக்கையே காரணம்.

அவர்கள்மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்னறர்.

.

மூலக்கதை