தமிழகம் முழுவதும் அரசு மருந்தாளுனர்கள் போராட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகம் முழுவதும் அரசு மருந்தாளுனர்கள் போராட்டம்

நாகை: காலியாக உள்ள 350க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்புதல், பள்ளி சிறார் திட்டத்தில் 770 மருந்தாளுனர் பணியிடங்களை சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை 12. 11. 15ன்படி நிரப்புதல், 385 வட்டார மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்குதல், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் கீழ் இயங்கும் 32 மாவட்ட மருந்து கிடங்குகளில் மருந்து கிடங்கு அலுவலர் பணியிடம் உருவாக்குதல், கூடுதலாக மூன்று கட்ட பதவி உயர்வு பணியிடங்கள் மருந்தக கண்காணிப்பாளர், மருந்தியல் அலுவலர் மற்றும் துணை இயக்குனர் மருந்தியல் பணியிடங்களை உருவாக்குதல், நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர்களை பணி வரன்முறை செய்தல், நோயாளிகளின் எண்ணிக்கைக்குகேற்ப மருத்துவ குறியீட்டின்படி கூடுதல் மருந்தாளுனர் பணியிடங்களை உருவாக்குதல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் இன்று தொடர் முழக்க போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாகை இணை இயக்குனர் அலுவலகம் முன் இன்று தொடர் முழக்க போராட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ராமநாத கணேசன் கோரிக்கை பற்றி பேசினார்.

இதேபோல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மருந்தாளுனர்கள் போராட்டம் நடத்தினர்.

.

மூலக்கதை