கடும் எதிர்ப்புகளையும் மீறி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: லிட்டருக்கு 25 காசுகள் உயர்த்தியதால் அதிருப்தி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கடும் எதிர்ப்புகளையும் மீறி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: லிட்டருக்கு 25 காசுகள் உயர்த்தியதால் அதிருப்தி

சென்னை: விண்ணை முட்டும் அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தும் நிலையில் இன்றும் விலையை உயர்த்தியுள்ளது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.    நாட்டில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை அடைந்துள்ளது. படிப்படியாக உயர்த்தப்பட்டு வந்த விலை உயர்வு பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த விலை உயர்வை குறைக்க மத்திய அரசு முன் வராததால் அகில இந்திய அளவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இன்று நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள பெட்ரோல், டீசல் விலையை குறைக்ககோரி இந்த முழு அடைப்பு போராட்டம் தீவிரமடைந்துள்ளது.



நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம் என எதிர்கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் ஏற்றம் கண்டுள்ளது பொதுமக்களை மேலும் கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.

சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையிருந்து உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது நேற்றைய விலையில் இருந்து பெட்ரோலுக்கு 25 காசுகள் உயர்த்தப்பட்டு லிட்டருக்கு 83. 91 காசுகளாகவும், டீசல் விலை 23 காசுகள் உயர்த்தப்பட்டு லிட்டருக்கு ரூ. 76. 98 காசுகளாகவும் விற்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இவ்வளவு எதிர்ப்பு இருந்தும், போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையிலும் குறைப்பதற்கான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுக்காதது பொதுமக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை