தமிழகத்தில் ஒரே நாளில் தங்கம் விலை கிடுகிடு... சவரனுக்கு 512 உயர்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகத்தில் ஒரே நாளில் தங்கம் விலை கிடுகிடு... சவரனுக்கு 512 உயர்வு

சென்னை : தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 512 உயர்ந்து, சவரன் 25 ஆயிரத்து 688க்கு விற்பனையானது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை மட்டும் விலை சற்று குறைந்தது. ஆனால் திங்கள் கிழமை முதல் ஏறுமுகத்தில் உள்ளது.

நேற்று காலையில் தங்கத்தின் விலை கிராமுக்கு  ரூ. 3144ஆக இருந்தது. பின்னர் 3 ரூபாய் உயர்ந்து 3147 ஆக இருந்தது.

இந்தநிலையில் இன்று காலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்துள்ளது. இன்று காலை தங்கத்தின் விலை கிராம் ரூ. 3211க்கு விற்பனையானது.

இதனால் நேற்று மாலையில் இருந்து கிராமுக்கு 64 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் இன்றைய நிலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 25 ஆயிரத்து 688 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

இன்று மாலையும் தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க பெடரல் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாததால், மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்தது.

இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் விலையில் பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளது. இது தமிழக தங்க நகைக்கடைகளின் வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறியதாவது: ‘சர்வதேச அளவில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் ஒரு டிராய் அளவு தங்கத்தின் விலை 1250 டாலரில் இருந்து 1380 டாலராக உயர்ந்துள்ளது. இந்த விலை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது.

இது குறைவதற்கு வாய்ப்பு இல்லை. ’ இவ்வாறு சாந்தகுமார் கூறினார்.


.

மூலக்கதை