உரிமைகளை கேட்டுப் பெற முடியவில்லை மத்திய அரசுக்கு அஞ்சும் தமிழக ஆட்சியாளர்கள்: கே.எஸ். அழகிரி காட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உரிமைகளை கேட்டுப் பெற முடியவில்லை மத்திய அரசுக்கு அஞ்சும் தமிழக ஆட்சியாளர்கள்: கே.எஸ். அழகிரி காட்டம்

மதுரை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி மதுரையில் நேற்று அளித்த பேட்டி: மாநில அரசு, குடிநீர் பிரச்னையை தீர்க்க உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் இருப்பது இந்த அரசுக்கு மிகப்பெரிய கேவலம்.

வறட்சி மாநிலமாக தமிழகத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும். ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்ற குழப்பமே தமிழக அரசுக்கு இன்னும் தீரவில்லை.

நீட் தேர்வில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 4 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். சமூக நீதி என்பது நீட் தேர்வில் இல்லை.

இதுவும் ஒரு தீண்டாமைதான்.

நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள், அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஒருநாளும் வளர்ச்சி அடைய முடியாது.

ஒரே மாதிரியான பாடத்திட்டம் இந்தியா முழுவதும் கிடையாது. ஆனால், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு வேண்டும் என்று சொன்னால் எந்த விதத்தில் நியாயம்? மத்திய அரசுக்கு பயப்படக்கூடிய ஒரு ஆட்சியாகவே, இந்த அரசு நீடித்து கொண்டிருக்கிறது.

அந்த காரணத்தினாலேயே தமிழகத்தின் உரிமைகளை கேட்டுப்பெற இந்த அரசு அஞ்சுகிறது. மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் மத்திய அரசுப் பணிகளுக்கு தாய்மொழியில் தேர்வு எழுதக்கூடிய ஒருநிலை உள்ளது.

ஆனால், தமிழகத்தில் உள்ள மாணவர்கள் தமிழில் எழுத முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை